சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவரை பூட்ஸ் காலால் மிதித்த போலீசார்!!

Read Time:2 Minute, 4 Second

ccd148a4-4747-462b-a341-145d53b14ec6_S_secvpfஆந்திராவில் தனியார் பல்கலைக்கழகம் தொடங்க முதல்–மந்திரி சந்திரபாபு முடிவு செய்து உள்ளார்.

விஜயவாடாவில் உள்ள முதல்–மந்திரி அலுவலகத்தில் நேற்று சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் வெளியானதும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக பல்வேறு மாணவர் சங்க அமைப்பினர் அமைச்சரவை கூட்டம் நடந்த முதல்–மந்திரி அலுவலகத்தை நோக்கி திரண்டனர். அலுவலகத்தை முற்றுகையிட்டு தனியார் பல்கலைக்கழகம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

ஆந்திராவில் நேற்று ஒய்.எஸ்.அர். காங்கிரஸ் கட்சியினர் பந்த் போராட்டம் நடத்தினார்கள். இதன் காரணமாக முதல்–மந்திரி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாணவர்கள் திரண்டு வருவதை அறிந்ததும் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள். போலீசாரின் தாக்குதலில் மாணவர் கூட்டமைப்பு சங்கத்தின் விஜயவாடா நகர செயலாளர் வசந்த் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவரது முகத்தை போலீசார் ஒருவர் பூட்ஸ் காலால் மிதித்தார். இதை கண்ட மாணவர்கள் கொந்தளித்தனர். போலீசுக்கு எதிராகவும், அரசின் முடிவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

நிலைமை மோசமாகவே போராட்டம் நடத்திய மாணவர்கள் பலரை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திராவில் ஊசியால் குத்தி பெண்களை தாக்கும் வாலிபர்!!
Next post 2–வது கணவருடன் தொடர்பை அம்பலப்படுத்துவதாக இந்திராணியை மிரட்டியதால் ஷீனா கொல்லப்பட்டாரா?