ஆந்திராவில் ஊசியால் குத்தி பெண்களை தாக்கும் வாலிபர்!!

Read Time:2 Minute, 37 Second

77933bf7-cb08-4aeb-81d5-4fb3e39d5894_S_secvpfஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் சுற்றி வரும் முகமூடி வாலிபர் ஒருவர் இளம் பெண்கள், மற்றும் மாணவிகளை ஊசியால் குத்தி தப்பி விடுகிறான்.

மர்ம வாலிபரின் திடீர் தாக்குதலால் 20–க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டனர். பீதி அடைந்த அவர்கள் போலீசில் புகார் செய்து உள்ளனர்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தை கதி கலங்க வைக்கும் அந்த முகமூடி வாலிபரை பிடிக்க போலீசார் 260 தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். அவனை பிடித்துக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். மேலும் வாலிபரின் மாதிரி கம்ப்யூட்டர் படத்தையும் போலீசார் வெளியிட்டது.

ஆனால் போலீசாரின் கண்ணில் சிக்காமல் அந்த வாலிபர் கறுப்பு நிற பல்சர் பைக்கில் வந்து பெண்களை குறி வைத்து தாக்கி வருகிறான்.

இந்த நிலையில் நேற்று பீமவரத்தில் ஆட்டோ டிரைவர் ஏசு தனது ஆட்டோவில் இறால் பண்ணைக்கு வேலைக்கு செல்லும் பெண்களை ஏற்றிச் சென்றார். அந்த ஆட்டோவை மர்ம வாலிபர் பின் தொடர்ந்து சென்றார்.

இதனை ஆட்டோ டிரைவர் ஏசு முதலில் கவனிக்கவில்லை. பெண்களை இறக்கி விட்டு திரும்பும் போது அந்த வாலிபர் கைக்குட்டையால் முகத்தை மூடியபடி கறுப்புநிற ‘பல்சர்’ பைக்கில் நின்று கொண்டு இருந்ததை கண்டார். அவன்தான் போலீஸ் தேடும் வாலிபர் எனக்கருதி அவனை பிடிக்க முயன்றார்.

உடனே அந்த வாலிபர் தனது கையில் இருந்த ஊசியால் ஏசுவை குத்தி கிழித்து விட்டு தப்பி விட்டான்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் திரண்டு வரும் முன்பு அந்த வாலிபர் தப்பிவிட்டான்.

காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஏசு நரசாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதியில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தலைமுடியை சீனா, ஜப்பானில் விற்பனை செய்ய ஏற்பாடு!!
Next post சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவரை பூட்ஸ் காலால் மிதித்த போலீசார்!!