சூனியக்காரி என்று சந்தேகித்து பெண்மணியைக் வெட்டிக் கொலை செய்த உறவினர்கள் கைது!!

Read Time:1 Minute, 37 Second

ff56a129-412a-49d4-aaad-51bff17c5324_S_secvpfகுஜராத் மாநிலம் வதோதராவில் சூனியக்காரி என்று சந்தேகப்பட்டு, 55 வயது பெண்மணியை அவரது உறவினர்களே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளி அன்று, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள லத்கோத் என்ற கிராமத்தில் இருக்கும் பண்ணை வீட்டில் சவிதா(55) அவரது கணவர் ஜேதாவுடன்(62) அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஜகதீஷ் மற்றும் ஷனா என்ற அவரது உறவினர்கள் இருவரும் கையில் கோடாளியுடன் அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்தனர்.

வயதாகி விட்டதால், ஓட முடியாது, கீழே விழுந்த இருவரையும் வெறி கொண்ட அந்த 2 பேரும் அடித்து உதைத்தனர். எப்படியோ ஜேதா அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். தனது மனைவியும் அந்த கொலைகாரர்களிடமிருந்து தப்பியிருப்பார் என்று நினைத்து நேற்று லத்கோத் கிராமம் முழுக்க அவரை தேடிய ஜேதா, சவிதா பிணமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், அந்த இரண்டு கொலைகாரர்களையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS)நல்லூர் கந்தசுவாமி கோயில் 12ம் திருவிழா – 30.08.2015!!
Next post திருப்பதியில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தலைமுடியை சீனா, ஜப்பானில் விற்பனை செய்ய ஏற்பாடு!!