பிரதமர் மன்மோகன்சிங் ரஷியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் 11-ந்தேதி புறப்படுகிறார்

Read Time:2 Minute, 9 Second

manmohan_singh.gifபிரதமர் மன்மோகன்சிங் 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் 11-ந்தேதி ரஷியா புறப்பட்டு செல்கிறார். ரஷியா பயணம் ரஷிய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் வரும் 11-ந்தேதி ரஷியா புறப்பட்டு செல்கிறார். அவர் அந்நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மன்மோகன்சிங் யார், யாரை சந்திப்பார் என்பது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் ரஷியாவின் அனைத்து உயர் தலைவர்களையும் அவர் சந்திப்பார் என்றும், இதற்கான பயண திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. முக்கிய ஒப்பந்தங்கள் ரஷிய அதிபர் புதின் முதல்முறையாக கடந்த 2000-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அதுமுதல் கடந்த 7 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இம்மாநாடுகள் டெல்லி மற்றும் மாஸ்கோவில் மாறி மாறி நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த வருடாந்திர மாநாடுகளின் தொடர்ச்சியாக, பிரதமர் மன்மோகன்சிங்கின் பயணம் இருக்கும் என்று மத்திய வெளியறவுத்துறை கூறி உள்ளது. மன்மோகன் சிங்கின் இந்த சுற்றுப்பயணத்தின் போது, இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை
Next post பைசா கோபுரத்திற்கும் கூடுதல் சாய்வான ஜெர்மனி கோபுரம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கிறது