தளபதி வீட்டில் ‘தல’ க்கு விருந்து?-திகைப்பூட்டும் திருப்பங்கள்
நம்பினால் நம்புங்கள்… நம்பாவிட்டாலும் கவலையில்லை. இந்த செய்தி நம் காதுக்கு வந்தபோது நாமும் ‘டவுட்’ ராமாசாமியாகதான் இருந்தோம். விசாரித்தால், ஆமாம் என்கிறார்கள் அஜீத் தரப்பில். சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு விஜய் வீட்டுக்கு சென்று அவர் கொடுத்த ஸ்பெஷல் விருந்தை அனுபவித்துவிட்டு வந்திருக்கிறார் அஜீத். திரையுலத்தில் எதிரும் புதிருமாக இருந்த இருவருக்கும் இடையில் பர்சனல் கோபங்களும் நிறைய என்பார்கள். ஒவ்வொருமுறையும் விஜய் பற்றி அஜீத்திடம் ‘போட்டுக்’ கொடுக்கும் சிலரிடம், அப்படியா.. இருந்திட்டு போகட்டுமே என்பாராம் அஜீத் கூலாக! அப்படிப்பட்டவரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒரு பாடல் காட்சி. அந்த காட்சியில் அஜீத்தை போலவே தொப்பை வைத்துக் கொண்டு ஆடினார் விஜய். அதன்பின் வெறியோடு தன் தொப்பையை குறைத்தார் அஜீத். இதெல்லாம் நேற்றோடு போச்சு. இன்று நாங்கள் பிரண்ட்ஸ் என்பது மாதிரி, சமீபத்தில் நடந்து அரசு விருது வழங்கும் விழாவில் அருகருகே அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும். இந்த சந்திப்பிற்கு பிறகுதான் அஜீத்தை தன் வீட்டு விருந்திற்கு அழைத்திருக்கிறார் விஜய். ஆரம்ப காலங்களில் ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது, அஜீத்திற்கும் சேர்த்து, விஜய் வீட்டிலிருந்து சாப்பாடு வருமாம். மேற்படி விருந்தின் போது அந்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டாராம் அஜீத். தலையும் தளபதியும் ஒன்னாயிட்டாங்க… ரசிக கண்ணுங்களா, இனிமேலாவது சமர்த்தா தோள் மேல கைய போட்டுக்கணும்… என்னா!?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...