ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை புறக்கணிக்கிறதா த.தே.கூ?

Read Time:1 Minute, 37 Second

1267696356Untitled-1தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் தமது கட்சியை புறக்கணித்து செயற்படுவதாக, ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

எனினும் குறித்த கலந்துரையாடலுக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தேசியப் பட்டியலில் உறுப்பினர்களைத் தெரிவு செய்த போதும் தமது கட்சியின் கருத்தினை கவனத்தில் கொள்ளவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

தினம் தினம் இவ்வாறு செய்யின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் இணைந்திருப்பது குறித்து தமது கட்சி தீர்மானிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!
Next post இம்மாதம் 30ம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம்!!