எனது தோல்வியினை பக்குவமாக ஏற்றுக்கொள்கின்றேன் -பா.அரியநேத்திரன்!!

Read Time:1 Minute, 55 Second

85941732Ariyanendiranஎனது முடிவினை நான் பக்குவமாக ஏற்றுக்கொண்டுள்ளேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நான் இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். என்மீது அதிருப்தி இருக்குமானால் எனக்கு வாக்களிக்கவேண்டாம் என நான் மக்களிடம் தெளிவாக கூறியிருந்தேன்.

ஆனால் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என கூறியிருந்தேன். அந்தவகையில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

எங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் செயலாளர் புதியவர், பழையவர்கள் என்ற கருத்தினை தெரிவித்துள்ளார்கள்.

அவர்கள் அரசியலை சினிமாபோன்று சித்தரித்துள்ளனர்.

புதிய நடிகர்களை வைத்து படத்தினை தயாரிக்கும்போது கூடிய வசூலைபெறுகின்ற பாணியாக இந்த அரசியல் நிலைமையை பார்த்துள்ளார்கள்.

அதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் எங்கள் பொதுச்செயலாளர்.

எதிர்வரும் காலத்தில் நடக்கும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இதுதொடர்பில் எனது ஆட்சேபனையினை தெரிவிக்கவிருக்கின்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிட்டி பார்ட்டி: ராதே மாவை செம கலாய்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!!
Next post எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமைக்கு மஹிந்தவே காரணம்!!