ராஜீவ் கொலை குற்றவாளிகளான நளினி, முருகன் தம்பதி…-பிரதமருக்கு வைகோ கடிதம்

Read Time:2 Minute, 31 Second

Vaiko01.jpgராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய முருகன், நளினி தம்பதியின் மகளை இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்று பிரதமருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு வைகோ எழுதிய கடித விவரம் வருமாறு:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்ற நளினி, முருகன் தம்பதியினர் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களது 15 வயது மகள் அரித்ரா, இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தங்கி இருக்கிறார்.

மகளைப் பார்கëகவும், அவர் இந்தியாவில் தங்கிப் படிக்கவும் முருகனும், நளினியும் கோருகின்றனர். ஆனால், அரித்ராவுக்கு `விசா’ வழங்க இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்து வருகிறது. இது தொடர்பாக முருகனும், நளினியும் பலதடவை முறையிட்டும் பலன் இல்லை.

இதனால், அவர்கள் இருவரும் கடந்த மாதம் 26-ந் தேதியில் இருந்து வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு அரித்ரா வருவதற்கு அனுமதி வழங்க, இலங்கையில் உள்ள இந்திய தூதுரகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் மீது தாக்குதல்…

இதுபோல் பிரதமருக்கு வைகோ எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில், “ராமேசுவரத்தைச் சேர்ந்த ராஜா, ஜான்சன் ஆகிய மíனவர்கள், கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாகச் சுட்டதிலë பலத்த காயம் அடைந்துள்ளனர். இதுபோன்ற தாக்குதல்களë இனிமேல் நடைபெறாமல் தடுத்து நிறுத்த தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வாகன விபத்தில் தாயும் மகளும் பலி
Next post யாழ் மாவட்ட புளொட் ராஜன் புலிகளால் படுகொலை