ஈத்தாமொழி அருகே மயக்க மருந்து கொடுத்து பட்டதாரி பெண் கற்பழிப்பு: வாலிபர் மீது புகார்!!

Read Time:2 Minute, 52 Second

556412d2-b06d-4673-9d26-d4a96170b9a1_S_secvpfஈத்தாமொழியை அடுத்த கொடிக்கால் காலனியைச் சேர்ந்தவர் முருகன், கூலி தொழிலாளி. இவரது மகள் ராதிகா (வயது 21). பி.காம். படித்து விட்டு சி.ஏ. தேர்வு எழுதி உள்ளார்.

இவர், இன்று காலை ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:–

எங்கள் ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்திருந்தார். அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகியதால் அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் மார்த்தாண்டம் சென்றோம். அங்குள்ள கோவிலில் தரிசனம் செய்தபோது அந்த வாலிபர் என்னிடம் திருமணம் செய்வதாக சத்தியம் அளித்தார்.

அன்றிரவு நாங்கள் இருவரும் அந்த வாலிபர் வீட்டில் தங்கினோம். அப்போது அவர், எனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்ததும், நான் மயங்கி விட்டேன். மறுநாள் காலையில்தான் கண் விழித்தேன். அப்போது நான் கற்பழிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை அந்த வாலிபர் கற்பழித்து விட்டார். இதுபற்றி நான் அவரிடம் நியாயம் கேட்டேன். அவர், என்னை சமரசப்படுத்தினார்.

பின்னர் என்னை தனியே இருத்தி விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. எனவே நான் அவரை செல்போனில் தொடர்பு கொண்டேன். அப்போது அவர், வடசேரி பஸ் நிலையத்தில் நிற்பதாகவும் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து வெளிநாடு செல்ல இருப்பதாகவும் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என்னை ஏமாற்றி கற்பழித்ததோடு எனது வாழ்க்கையையும் சீரழித்த அந்த வாலிபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயில் போக்குவரத்து தாமதம்!!
Next post கிட்டி பார்ட்டி: ராதே மாவை செம கலாய்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!!