அளுத்கம சம்பவம் – நஸ்டஈடு கோரி இளைஞர் மனு!!

Read Time:1 Minute, 39 Second

320902313Untitled-2அளுத்கம பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இளைஞர் ஒருவர் நஸ்டஈடு கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அளுத்கம பகுதியைச் சேர்ந்த முஹமட் அக்பர் என்பவரே இவ்வாறு மனுத் தாக்கல் செய்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனுவிற்கு பதிலளிக்க வேண்டியவர்களாக பொலிஸ் மா அதிபர், அளுத்கம பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் நாகொடை வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் அளுத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனது காலில் காயம் ஏற்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தான் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு தனக்கு உரிய சிகிச்சை கிடைக்காமையால் கால்களை இழக்க நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தனக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு உரிய நஸ்ட ஈட்டைப் பெற்றுத் தருமாறு கோரியே அவர் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசிய அரசாங்கம் குறித்து கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை!!
Next post ரயில் போக்குவரத்து தாமதம்!!