யாழ்.நீதிமன்ற தாக்குதல் – நால்வருக்குப் பிணை;ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

Read Time:1 Minute, 46 Second

2056796524indexயாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதானவர்களில் மேலும் நால்வருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 28 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர்கள் 28 பேரும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து நால்வருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் மீது தனித்தனியாக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

அதனடிப்படையில், ஒரு வழக்கில் 5 லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆட்பிணையிலும், பிறிதொரு வழக்கில் 5 லட்வம் ரூபா பெறுமதியான ஒரு ஆட்பிணையிலும், மற்றுமொரு வழக்கில் 5 லட்சம் ரூபா பெறுமதியான ஒரு ஆட்பிணையிலும் நால்வரைப் பிணையில் செல்ல அனுமதியளித்த நீதிமன்றம், ஏனைய 24 சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

அத்துடன், பிணையாளிகள் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் தகுதியானவன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார்!!
Next post கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விடயம் – நீதிமன்றில் மனுத் தாக்கல்!!