மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழ் இனி போட்டியிட மாட்டோம்! கம்மன்பில!!

Read Time:1 Minute, 44 Second

1841991284Untitled-1தேசியப் பட்டியலில் கூட்டமைப்பின் உறுப்பினர்களை தெரிவு செய்யும் தார்மீக உரிமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை எனவும், தேசியப் பட்டியில் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பிவிதுறு கெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதனால் தற்போது கூட்டமைப்பின் கட்சிகள் நிர்க்கதியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிவிதுறு கெல உறுமய, வெற்றிலைக்கு வாக்களித்த மக்களின் நிலைப்பாடுகளுக்கு அமைய எதிரணியில் செயற்படவுள்ளதாகவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமைத்துவத்தின் கீழ் தமது கட்சி எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் மனித உரிமைகள் அலுவலகத்தால் எதிர்காலத்தில் உள்ளூர் பொறிமுறை என்ற போர்வையின் கீழ் கொண்டுவரப்படவுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு தாம் உள்ளிட்ட குழுவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பூர் மீள்குடியேற்றத்திற்கு அமெரிக்கா நிதி! (வீடியோ)!!
Next post கங்கையில் குதித்த பௌத்த துறவி – தேடும் பணிகள் தீவிரம்!!