மட்டில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

Read Time:2 Minute, 25 Second

1009813361Untitled-1நேற்று மாலை துப்பாக்கியுடன் ஒருரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 15ம் திகதி ஒட்டமாவடி – ஹிதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஓட்டமாவடி – பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த முகமட் அமீன் (37) என்பவர் கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் துப்பாக்கி சூடு நடாத்துவதற்கு உதவியதாக கூறப்படும் ஒருவர் சனிக்கிழமை பிற்பகல் எஸ்.எம்.ஜி.ஹாஜியார் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கியும் வீடொன்றில் இருந்து மீடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது ஒரு அரசியல் பிரச்சினையாக கடந்த தேர்தல் காலத்தின் போது காட்டப்பட்டதாகவும் இந்த சூட்டு சம்பவம் குடும்ப பிரச்சினையால் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரை ஞாயிற்றுக்கிழமையன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்முனையில் நான்கு இந்தியர்கள் கைது!!
Next post தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது!!