ஷில்பா குத்திய பச்சை…!!

Read Time:2 Minute, 39 Second

shilpa-500x500ஷில்பா ஷெட்டி தனது வாழ்க்கையிலேயே இப்போதுதான் முதல் முறையாக பச்சை குத்திக் கொண்டுள்ளார். ஸ்வஸ்திகா சின்னத்தை தனது இடது கை மணிக்கட்டில் ஷில்பா பச்சை குத்தியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் எனது முதல் டாட்டூ இது. ஸ்வஸ்திகா என்று குறிப்பிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.
பாலிவுட்டில் பச்சை குத்திக் கொண்ட நடிகர், நடிகையர் எண்ணிக்கை நிறையவே இருக்கிறது. தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அர்ஜூன் ராம்பால், ஹிருத்திக் ரோஷன், அஜய் தேவ்கன், மலாய்க்கா அரோரா என பலரும் டிசைன் டிசைனாக பச்சை குத்தியுள்ளனர்.

ஸ்ருதி, திரிஷா சீனியர்கள்
நம்ம கோலிவுட்டிலும் கூட ஸ்ருதி ஹாசன், திரிஷா, குஷ்பு என பலரும் பச்சை குத்தியுள்ளனர்.
ஷில்பாவின் நீண்ட நாள் ஆசை
ஷில்பா ஷெட்டிக்கு நீண்ட காலமாகவே பச்சை குத்திக் கொள்ளும் ஆசை இருந்ததாம். ஆனால் இப்போதுதான் அது ஈடேறியுள்ளதாம்.

வலிக்குமே என்ற பயத்தால்
பச்சை குத்தும்போது வலிக்குமே என்ற பயத்தால்தான் இத்தனை காலமாக அவர் பச்சையே குத்திக் கொள்ளாமல் இருந்து வந்தாராம். ஷில்பாவுக்கு ஊசி என்றாலே அலர்ஜியாகி விடும். எனவேதான் பயந்து கொண்டிருந்தார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறினார்.

கேலி செய்த குந்த்ரா
தான் கட்டக் கடைசியாக பச்சை குத்திக் கொண்டு விட்டதாக கணவர் ராஜ் குந்த்ராவிடம் தெரிவித்தபோது அவர் நம்பவே இல்லையாம். நீயா, பச்சைக் குத்திக் கொண்டாயா. டூப் விடாதே என்று கேலி செய்தாராம் குந்த்ரா.
ஸ்வஸ்திகா பச்சை
ஆகஸ்ட் 14ம் திகதி தான் ஸ்வஸ்திகா சின்னத்தை பச்சைக் குத்திக் கொண்டுள்ளார் ஷில்பா ஷெட்டி. அழகாத்தான் இருக்கு…!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிழக்கு மாகாணசபை உறுப்பினராக அருண சிறிசேன!!
Next post வடகொரியா தென்கொரியா இடையே மோதல் – எல்லையில் பதற்றம்!!