பெண்ணிடம் பறித்த 5 பவுன் நகையை வாயில் போட்டு விழுங்கிய திருடன்: நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்!!

Read Time:2 Minute, 15 Second

ea3dc405-c223-4161-8b91-85783ad682fc_S_secvpfஐதராபாத் சில கல கூடா பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கரய்யா. இவரது மனைவி பிரமிளா. தம்பதிகள் இருவரும் தினமும் காலை அந்த பகுதியில் வாக்கிங் செல்வது வழக்கம்.

இதனை மாணிக்கேஸ்வரி நகரைச் சேர்ந்த விகாஸ் (22) என்ற செயின் பறிப்பு திருடன் நோட்டமிட்டான்.

சம்பவத்தன்று பிரமிளா கணவருடன் வாக்கிங் சென்ற போது திருடன் விகாஸ் பிரமிளா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலிச் செயினை பறித்தான்.

உடனே பிரமிளா கூச்சல் போட்டார். அந்தப் பகுதியில் ரோந்து வந்த போலீசார் விகாசை விரட்டினர்.

போலீஸ் பிடியில் சிக்கிய விகாஸ் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் முன்னிலையிலேயே திருடிய செயினை வாயில் போட்டு விழுங்கினான்.

போலீசார் அதனை தடுக்க முயன்றனர். முடியவில்லை.

விகாசை கைது செய்த போலீசார் அவன் விழுங்கிய நகையை கைப்பற்ற விகாசை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். விகாஸ் வயிற்றில் எக்ஸ்ரே செய்ததும் வயிற்றுக்குள் செயின் இருப்பது பளிச் என தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்து நகையை எடுத்து தரும்படி போலீசார் கேட்டபோது டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

அறுவை சிகிச்சை செய்தால் விகாஸ் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.

விகாஸ் மலம் கழிக்கும் போது செயின் வெளியே வந்து விடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

விகாஸ் எப்போது மலம் கழிப்பான் என்று நகையை எப்படி மீட்பது என்று தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூருவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை தாக்கி மானபங்கம்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்!!
Next post சகல தீர்மானங்களும் நாடு, மக்களின் வெற்றியை நோக்காகக் கொண்டிருக்க வேண்டும்!!