பெங்களூருவில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை தாக்கி மானபங்கம்: 25 பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்!!

Read Time:1 Minute, 44 Second

77de4f13-8975-4671-aa1e-a3a1b2f7443e_S_secvpfஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் பிரிர்னா. 22 வயதான இவர் பெங்களூருவில் உள்ள தயானந்தசாகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார்.

சம்பவத்தன்று பிரிர்னா தனது நண்பர் பாவேசுடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். பிற்பகல் 2.30 மணியளவில் சென்று கொண்டிருந்த போது அவர்களை ஒரு கும்பல் வழி மறித்தது. மோட்டார் சைக்கிள் சாவியையும் பறித்துக்கொண்டது. அந்த கும்பலில் 25 பேர் இருந்தனர்.

பின்னர் அதே கும்பல் மாணவியை சரமாரியாக தாக்கி மானபங்கம் படுத்தியது. இதில் மாணவிக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையும் பொருட்படுத்தாமல் அந்த கும்பல் அவரை தாக்கியது.

அந்த கும்பலில் இருந்து ஒரு வழியாக தப்பி ஓடினார். பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் குறித்து மாணவி உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் உடனடியாக புகாரை வாங்கவில்லை. 1 மணி நேரம் கழித்துதான் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருநங்கைகள் கையில் விசில்: திறந்தவெளியில் அசுத்தம் செய்வோரை தடுக்க அதிரடி திட்டம்!!
Next post பெண்ணிடம் பறித்த 5 பவுன் நகையை வாயில் போட்டு விழுங்கிய திருடன்: நகையை மீட்க முடியாமல் போலீசார் திணறல்!!