பெற்ற வெற்றியை பாதுகாக்க இனவாதிகளுடன் அவதானமாக இருக்க வேண்டும்!!

Read Time:1 Minute, 43 Second

111108333arjuna-r-Lஇந்த முறை பாராளுமன்றிற்கு தெரிவானவர்களில் நாட்டை அழிவுக்குட்படுத்தியவர்கள் அதிகமானோர் இருப்பதாக துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டை வெற்றியடையச் செய்வதற்காக பாடுபட்ட அதிகமானோர் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மஹரையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயத்தில் தனது வெற்றியைக் கொண்டாடும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

17ம் திகதி அடைந்த வெற்றியை பாதுகாத்துக் கொள்ளும் முகமாக தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜனவரி 8ம் திகதி பெற்ற வெற்றியினூடாக கடந்த காலங்களில் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு இந்த நாட்டை சுத்தமான இரண்டு தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

எவ்வாறாயினும் இனவாதிகளும் திருடர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பதனால் அவர்கள் தொடர்பில் நாம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனவரி 8ம் திகதி புரட்சி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!!
Next post ஒருவரை கடத்திச் செல்லும் வழியில் பொலிஸாரிடம் சிக்கிய 9 பேரும் கைது!!