அமைதியான தேர்தல் இடம்பெற்றுள்ளது; தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்போம்!!

Read Time:2 Minute, 0 Second

1371664088Sobithaநடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பில் இதுவரை எந்த முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்பதனால் அமைதியான மற்றும் சாதாரண தேர்தல் ஒன்று நடைபெற்றிருப்பது தௌிவாவதாக மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் அதிகாரங்களை பயன்படுத்தி நடைபெற்றதனால் அது சாதாரண மற்றும் சுதந்திரமான தேர்தலாக இருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்றதிகாரத்தையோ அல்லது பிரதமர் தனக்குள்ள அதிகாரத்தையோ இந்தத் தேர்தலில் பயன்படுத்தி இருக்கவில்லை என்று தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரங்களுக்காக வானூர்திகளை பயன்படுத்தி இருந்த போதிலும் அதனை சட்டப்படி அதற்குறிய பணத்தை செலுத்தி பெற்றுக் கொண்டதன் மூலம் மக்களுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்த அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு மீண்டும் 5 ஆண்டுகளுக்கு ஆணை வழங்கியிருப்பது அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே. அது தொடர்பாக விழிப்புடன் இருப்பதாகவும் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இம்முறை கட்சிகள் பெற்ற மேலதிக ஆசனங்கள் பற்றிய விபரம்!!
Next post அமைதியான தேர்தல் நடைபெற்றது – ஐரோப்பிய ஒன்றியம்!!