நெல்லை பேட்டையில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்!!

Read Time:4 Minute, 39 Second

4df04046-f595-46aa-9af5-1e9aa2793f67_S_secvpfநெல்லை பேட்டை செக்கடி அருகே உள்ள திருத்து பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் ஞானகுணபூஷனம் (வயது 78). திருமணமாகாத இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் முன்புறம் கதவு பூட்டப்பட்டு இருந்தது.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அப்பகுதி பொதுமக்கள் கதவை தட்டி ஞானகுணபூஷனத்தை அழைத்தனர். ஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் கேட்கவில்லை. இதையடுத்து வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது, உள்ளே ஞானகுணபூஷனம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து உடனடியாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது ஞானகுணபூஷனத்தின் தலையில் பலத்த காயம் இருந்தது. மேலும் அவரது கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததோடு, கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனால் மர்மநபர் ஞானகுணபூஷனத்தை கழுத்தை நெரித்து கொன்று நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல் கிடைத்தது.

கொலை செய்யப்பட்ட ஞானகுணபூஷனத்துக்கு குணசேகரன், ராஜரத்தினம், மனோகரன், ஞானசேகரன் ஆகிய 4 சகோதரர்கள் உள்ளனர். இதில் ஞானசேகரன் இறந்து விட்டார். ஊட்டி கூட்டுறவு பேரங்காடியில் வேலை பார்த்து வந்த ஞானகுணபூஷனம் ஓய்வு பெற்றதையடுத்து , அங்கு காய்கறி கடை நடத்தி வரும் அவரது சகோதரர் ராஜ ரத்தினம் வீட்டில் வசித்து வந்தார்.

இதனிடையே ஞானசேகரன் பேட்டை திருத்துவில் புதிதாக வீடு கட்டினார். திடீரென அவர் மரணமடைந்ததையடுத்து அந்த வீட்டை பராமரிப்பதற்காக ஞானகுணபூஷனம் பேட்டைக்கு வந்து விட்டார். அங்கு தங்கியிருந்து வீட்டை பராமரித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை ஞானகுண பூஷனம் வீட்டிற்குள் குடிபோதையில் புகுந்த மர்மநபர் ஒருவர் அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே ஞானகுணபூஷனத்தை கழுத்தை நெரித்து கொன்று நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். பின்னர் வீட்டின் கதவை பூட்டி விட்டு சாவியை கொண்டு சென்றுள்ளார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் போலீஸ் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. அந்த நாய் ஞானகுணபூஷனம் வீட்டில் இருந்து கம்பாநதி வழியாக சென்றது. பின்னர் அம்பேத்கார் தெரு பகுதிக்கு சென்ற நாய், பின்னர் அங்கிருந்து ஞானகுணபூஷனம் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டது. இதனால் கொலையாளி அந்த பகுதியில் பதுங்கியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதையடுத்து அங்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தினார். கற்பழிப்பு முயற்சியில் ஞானகுணபூஷனம் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனந்தபுரி எக்ஸ்பிரசில் ஜன்னல் கதவின் ஷட்டர் விழுந்து பெண் பயணி காயம்!!
Next post சித்தூர் அருகே டிராக்டர் டேங்கருக்குள் மறைத்து ரூ.10 லட்சம் செம்மரம் கடத்தல்: 2 பேர் கைது!!