54 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென மாயம்!!

Read Time:1 Minute, 57 Second

1018111201Untitled-1இந்தோனேசியாவில் 54 பயணிகளுடன் சென்ற விமானம் இன்று திடீரென காணாமல் போயுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பப்புவா மாகாணத்தின் வான்பகுதியில் சென்றபோது விமானம் காணாமல் போனதை தேசிய மீட்புக்குழு உறுதி செய்ததாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

விமானத்தின் சமிங்சைகளுக்காக காத்திருக்கும் அதேசமயம், அதனை தேடும் பணியையும் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

டிரைகானா விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பயணிகள் விமானம், ஜெயபுராவின் சென்டானி விமான நிலையத்திற்கும் ஆக்சிபில் பகுதிக்கும் இடையே பறந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, அப்பகுதிக்கு மீட்புக்குழு விரைகிறது.

விமானத்தில் 44 பயணிகள், 5 குழந்தைகள் மற்றும் 5 ஊழியர்கள் இருந்ததாக தேசிய மீட்புக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஏர் ஏசியா பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்தனர்.

இதையடுத்து, விமான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விமானம் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதுளை மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது!!
Next post பெற்றோல் குண்டு வீச்சு – எட்டுப் பேர் காயம்!!