வீட்டில் மகன் இறந்து கிடந்ததை 3 நாட்களாக அறியாத பெற்றோர் – யாழில் சோகம்!!

Read Time:1 Minute, 29 Second

1280123268Untitled-1மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் மின்சார வேலை செய்துகொண்டிருந்துள்ளார். அந்த வேலையின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடந்துள்ளார்.

வீட்டில் தாய் மற்றும் தந்தை வாய் பேச முடியாதவர்கள் மகன் இறந்து கிடந்ததை கூட அறிந்திருக்காமல் இருந்த போது இன்று ஞாயிற்றுக்கிழமை சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

அதன்போது, பெற்றோர்கள் மகன் இறந்து கிடந்ததை கண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு கோப்பாய் பொலிஸார் சென்று பார்வையிட்டதுடன், சடலத்தினை யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கைது!!
Next post பதுளை மாவட்டத்தில் வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது!!