வேட்பாளர் ஒருவரின் வீட்டுப் பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

Read Time:1 Minute, 51 Second

454183174Untitled-1இம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வீட்டின் முன் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியின் கல்கமுவ பிரதேசத்தில் அவரது வீடு அமைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் அலுவலகத்தின் மீது நேற்றிரவு சிறு தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகம் மற்றும் பருத்தித்துறை வீதி நல்லூருக்கு அருகில் உள்ள வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து யாழ். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை!!
Next post குலசேகரன்பட்டினத்தில் கூடாரத்தில் தூங்கிய சிறுமியை கற்பழிக்க முயற்சி: 4 வாலிபர்கள் கைது!!