குலசேகரன்பட்டினத்தில் கூடாரத்தில் தூங்கிய சிறுமியை கற்பழிக்க முயற்சி: 4 வாலிபர்கள் கைது!!

Read Time:2 Minute, 30 Second

fef98294-3729-4845-9000-6dbf191b94a5_S_secvpfதசரா விழா வருவதை முன்னிட்டு மதுரை கல்லுமேடு பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஊசி, பாசி உள்ளிட்ட பொருட்களை விற்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.

சம்பவத்தன்று அக்குடும்பத்தை சேர்ந்த சிறுமி ஈஸ்வரி (வயது11, பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கூடாரத்தில் தூங்கி கொண்டிருந்தாள். அப்போது கூடாரத்தின் பின்புறம் வழியாக நுழைந்த 4 பேர் கும்பல் திடீரென ஈஸ்வரியின் வாயை பொத்தி அலாக்காக தூக்கி சென்றனர்.

சிறிது தூரம் செல்லும் போது 4 பேரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஈஸ்வரி சத்தம் போட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஈஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டுசென்றனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் 4 பேரும் சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பியோட முயன்றனர். இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து 4 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை குலசேகரன்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 4 பேரும் நாசரேத் பகுதியை சேர்ந்த கார் டிரைவர்களான தினேஷ் (23), ஸ்டாலின் (28), கட்டிட தொழிலாளி இசக்கிமுத்து (29), ஜவுளி வியாபாரி ஐகோர்ட்டு துரை (29) என்பதும், சிறுமி ஈஸ்வரியை கடத்தி சென்று கற்பழிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேட்பாளர் ஒருவரின் வீட்டுப் பகுதியில் இருந்து கைக்குண்டு மீட்பு!!
Next post நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கைது!!