மயிலாடுதுறை அருகே மாணவிக்கு முத்தம் கொடுத்த ஆசிரியர் கைது!!

Read Time:1 Minute, 43 Second

36db35ce-a75a-4f08-9cbc-40c90f79e4e5_S_secvpfநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரை சேர்ந்த மாணவி ஒருவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
நேற்று மாலை அவர் பள்ளி முடிந்து பஸ்சில் ஊருக்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூவலூர் தெற்கு தெருவை சேர்ந்த மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்க்கும் ஜெகதீசன் (27) அங்கு வந்தார்.

அவர் மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறினார். அதனை கண்டு கொள்ளாமல் மாணவி சென்றார். திடீரென ஆசிரியர் மாணவியை கட்டிப் பிடித்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பெற்றோரிடம் கூறினார். இதனை தொடர்ந்து குத்தாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஜெகதீசனை கைது செய்தார். அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவெண்ணைநல்லூர் அருகே மேலும் ஒரு பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் சாலை மறியல்!!
Next post (PHOTOS)வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன!!