நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழப்பு!!

Read Time:2 Minute, 12 Second

469019614Centralமஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

இச் சம்பவம் இன்று சனிக்கிழமை (15.08.2015) காலை இடம் பெற்றுள்ளது.

மஸ்கெலியா குயின்ஸ்லன் தோட்டத்தில் வசிக்கும் மேற்படி இரு இளைஞர்களும் இன்று காலை 9 மணியளவில் விளையாட செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பின் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தின் டெனியன் தோட்ட நீர்தேக்கப்பகுதியில் நீராட சென்ற அவர்களில் ஒருவர் நீராடி கொண்டிருக்கும் வேளையில் தீடிரென நீரிழ் மூழ்கும் நிலையில் காணப்பட்ட போது அவரை காப்பற்ற சென்ற மற்ற இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பிரதேச மக்கள் தேடும் பணியில் ஈடுப்பட்ட போது சுமார் 1 மணித்தியாலயங்களின் பின் சடலத்தை நீர்தேக்கத்திலிருந்து மீட்டுள்ளனா்.

இவ்வாறு உயிரிழந்தவா்கள் மஸ்கெலியா குயின்ஸ்லன் பகுதியை சேர்ந்த ரஜேந்திரன் யோகஸ்வரன் (வயது – 19), விஜயரட்ணம் கிருஷ்ண குமார் (வயது – 17) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனா்.

குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனா். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றினால் வழங்கப்பட்ட உணவில் மட்டத்தேள்!!
Next post 17ம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்கலாம்!!