ஏற்றுமதித் துறையை பாதிக்கும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது – ஜனாதிபதி!!

Read Time:1 Minute, 37 Second

1485694680Janaஉள்நாட்டுச் சந்தை மற்றும் ஏற்றுமதிச் சந்தை என்பவற்றிற்கு பாதிப்புக்கள் ஏற்படும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு தயாரிப்பு மற்றும் உள்நாட்டு தொழில்துறை என்பவற்றிற்கு அதிகளவான அனுசரணைகளை பெற்றுக் கொடுப்பதே தமது அரசாங்கத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

தனியார் துறையை பலப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதாண குறிக்கோள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பண்டாரகமை, ரய்கம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு உற்பத்திகளை பலப்படுத்துவதன் மூலமாகவே நாட்டின் பொருளாதாரம் பலப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கடந்த காலங்களில் உள்நாட்டு தொழில் துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதை காண முடியவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கருமபீடம் அமைப்பு!!
Next post விடுதலைப்புலி உறுப்பினர்கள் 06 பேர் இந்தியாவில் கைது!!