புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கருமபீடம் அமைப்பு!!

Read Time:1 Minute, 39 Second

1019156718parliment02எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வசதிக்காக தகவல் கருமபீடமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் மு.ப. 9.30 முதல் பி.ப. 3.30 வரை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்த தகவல் கருமபீடம் நடத்தப்படும் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான தகவல்களையும் ஆவணங்களையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால், இந்த நாட்களில் தவறாமல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் புதிய பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையும் அன்றைய தினம் இடம்பெறும் எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன்.!!
Next post ஏற்றுமதித் துறையை பாதிக்கும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது – ஜனாதிபதி!!