ரூபாய் நோட்டில் மொபைல் போன் சார்ஜாகும் வித்தை

Read Time:1 Minute, 53 Second

மொபைல் போன் சார்ஜ் செய்ய, சார்ஜரை பிளக்கில் பொருத்தி நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை. ரூபாய் நோட்டு இருந்தால், நொடியில் சார்ஜ் செய்து விட முடியும். குறிப்பாக நோக்கியா நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனை செய்யப் பட்ட மொபைல் போன்கள், இந்த புதிய வித்தைக்கு கட்டுப்படுகின்றன. புரியை சேர்ந்த 20 வயது இளைஞர் டபன் குமார் பட்ரா இந்த வித்தையை பொதுமக்கள் மத்தியில் செய்து காண்பித்தார். இவர் எலக்டிரீஷியனாக தொழில் செய்கிறார். நீண்ட ஆராய்ச்சிக்கு பின் இதை கண்டு பிடித்ததாகவும், 50 கி.மீ., சுற்றளவில் மொபைல் போனுடன் வேறு எந்த போனையும், எந்த வித நெட்வொர்க்கும் இல்லாமல் இணைக்கும் கருவியையும் கண்டுபிடித்து இருப்பதாகவும் டபன் குமார் கூறுகிறார். குறிப்பாக ஏழு ஆண்டுக்கு முந்தைய நோக்கியா மாடல் மொபைல் போன்கள், ரூபாய் நோட்டு மூலம், வினாடியில் சார்ஜ் செய்யப்படுகிறது. இதற்கு 10 ரூபாய் கரன்சி நோட்டும், அதற்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட கரன்சி நோட்டுக்களையும் பயன்படுத்தலாமாம். இந்த வித்தையை எப்படிச் செய்வது என்று தனது நண்பர் களுக்கு மட்டுமே டபன் குமார் சொல்லிக் கொடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடுரோட்டில் பாம்பிற்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்: 21 பாம்பு குட்டிகள் பிறந்தன
Next post அமெரிக்க வீரர் ஓடும்போது மரணம்