பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டுவீச்சில் 50 பேர் பலி

Read Time:1 Minute, 41 Second

Israel.flag.jpgஇஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் மோதல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவவீரர் ஒருவரை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திச்சென்றதை தொடர்ந்து இஸ்ரேல் பீரங்கி படை மேற்குகரை காசா பகுதிகளில் புகுந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் எகுத்ஆப்மர் உத்தரவிட்டதை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவ வீமானங்கள் காசாபகுதியில் சரமாரிகுண்டு வீசியது.
கடந்த 5 நாட்களாக விமானங்கள் குண்டு வீசியதில் 50 பாலஸ்தீனியர்கள் பலியாகிவிட்டனர்.

நேற்று மட்டும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஒரு குழந்தையும் பலியாகி விட்டது. காசாபகுதியில் ஏராளமான அடுக்குமாடிகுடிருப்புகள் குண்டு வீச்சில் தரைமட்டமாகி விட்டது. ஹமாஸ் இயக்க தலைவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த உதவும்படி ஜோர்டான் மன்னர் அப்துல்லாவிடம் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் வேண்டுகோள்விடுத்து இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மும்பையில் ரெயில்கள் தகர்ப்பு: குண்டு வெடிப்பு பலி 190 ஆக உயர்வு
Next post வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புளொட் தலைவர் த.சித்தார்த்தன்…