புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு: இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடந்தது என்ன? (முதல்கட்ட முழுமையான தகவல் & வீடியோ)!!

Read Time:7 Minute, 31 Second

timthumb (1)புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு: இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடந்தது என்ன? (முதல்கட்ட முழுமையான தகவல் & வீடியோ)

கடந்த 13.05.2015 அன்று புங்குடுதீவில் வைத்து கூட்டு வன்கொடுமைக் குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதன் அவர்களது வழக்கு இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதவான் எஸ்.லெனின்குமார் அவர்களின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சட்டத்தரணி திரு கே.வி தவராசா அவர்களோ அன்றில் அவரது ஜூனியர் வழக்கறிஞர்கள் எவருமோ மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அதேபோன்று இந்த வழக்கிலே வழமைபோல் ஆஜராகும் அரசியல்வாதியாகிய துவாரகேஸ்வரனோ அன்றில் அவரது சட்டத்தரணிகளோ மன்றில் பிரசன்னமாகி இருக்கவில்லை, (சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா அவர்கள், நீதிவான் நீதிமன்றத்திலும், போலீசிலும் யாழ்.மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் திரு. துவாரகேஸ்வரனுக்கு எதிராக கடந்தவாரம் செய்த முறைப்பாட்டையடுத்து, இன்றையதினம் கொழும்பு நீதிமன்றில் அந்த வழக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது)

இதேவேளை இருந்த போதிலும், வித்தியாவின் தாயாரும் வித்தியா தரப்பில ஆஜராகின்ற பெண்கள் அமைப்பின் சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

மன்றில் இன்றையதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தாக்கல் செய்த மனுவிலே, சுவிஸ் குமார் அல்லது பிரகாஸ் என அழைக்கப்படும் மகாலிங்கம் சிவகுமார், நிசாந்தன், சந்திரகாசன், ஜெயக்குமார், தவக்குமார் ஆகியோரின் ஆலோசனையின்படி அவர்களின் தலைமையின் கீழுமே மேற்படி சம்பவம் நடைபெற்றதெனவும், ஏனைய நால்வரும் இவர்களுக்கு உடந்தையான இருந்துள்ளனர் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பதுபேரும், “பொலிஸார் தம்மிடம் சிங்களத்திலேயே கதைத்து தங்களை வற்புறுத்தியே வாக்குமூலமும், கையெழுத்தும் பெறப்பட்டதாக தெரிவித்த போது. இடைமறித்த நீதிமன்ற பொலிஸார் மேற்படி ஒன்பது சந்தேகநபர்களுக்கும் சிங்களம் ஓரளவு நன்றாகவே தெரியும் எனவும், இவர்களிடம் ஒழுங்கான முறையிலேயே வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும்” தெரிவித்தனர்.

ஆறாவது சந்தேகநபர் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், “டீ.என்.ஏ பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டுமென்று” கேட்டுக் கொண்டார்.

அதேநேரம் மற்றுமொரு சந்தேகநபரான சிவதேவன் நிசாந்தன் என்பவர் “வித்தியாவின் கண்ணாடி தனது வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுவது முழுப்பொய் எனவும், தன்னைப் பொலிஸார் அழைத்துச் சென்று ஒரு கடையில் வைத்தே அந்த கண்ணாடியை வாங்கி வந்து தனக்கு முன்னாலேயே தனது வீட்டில் வைத்து விட்டு எடுத்ததாகவும்” குறிப்பிட்டார்.

இதனையடுத்து நீதிபதி எஸ்.லெனின்குமார் அந்தக் கண்ணாடியை 26.08.2015அன்று நீதிமன்றில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சந்தேகநபர்கள் அனைவரும் பிணை பெறுவதற்கு முயன்ற போது நீதிபதி எஸ். லேனின்குமார் அவர்கள், “இந்த மாவட்ட நீதிமன்றில் பிணை வழங்க முடியாதெனவும், இந்த வழக்கு மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நீங்கள் அங்கு பிணை பெறுவதற்கு முயற்சி செய்யலாமெனவும்” கூறினார்.

அதேவேளை சந்தேகநபர்கள் ஒன்பதுபேரும் “தமக்காக எந்த ஒரு சட்டத்தரணியும் ஆஜராவதற்கு தயங்குவதோடு, பயப்படுகின்றார்கள்” என மன்றில் ஒருமித்த குரலில் தெரிவித்தனர். இதனைச் செவிமடுத்த நீதவான், “உங்களுக்காக சட்டத்தரணிகளை ஆஜராகும் விடயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென்றும் ஆயினும் ஆஜராகும் சட்டத்தரணிகளுக்கு யாராவது அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தலை மேற்கொண்டால் அது குறித்து தான் நடவடிக்கை எடுக்க முடியுமென்றும்” தெரிவித்தார்.

அடுத்து இந்த வழக்கு இம்மாதம் 26ஆம் திகதிக்கு அதாவது இன்னமும் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இத்தகவலானது இன்றைய வழக்கின் போது, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இருந்து தரப்பட்ட நேரடித் தகவலாகும்.
**ஆகவே, மேற்படி இன்றைய வழக்கு குறித்த “மேலதிக விரிவான தகவல்களும், புகைப்படங்களும், வீடீயோக்களும்” இன்னும் சில மணித்தியாலங்களில் “அதிரடி” இணைத்தில் வெளியாகும். (அதிரடியுடன் இணைந்திருங்கள்….)

*** இதேவேளை மற்றுமொரு தகவலின்படி,
சட்டத்தரணி திரு.கே.வி.தவராசா அவர்கள், நீதிவான் நீதிமன்றத்திலும், போலீசிலும் யாழ்.மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் திரு. துவாரகேஸ்வரனுக்கு எதிராக கடந்தவாரம் செய்த முறைப்பாட்டையடுத்து, இன்றையதினம் கொழும்பு நீதிமன்றில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்து, திரு. துவாரகேஸ்வரன் இருபது இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட போதும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் (நீதிமன்றில் தொலைபேசி கதைத்ததாக கூறி) இன்றுமாலை நான்கு மணிவரை காவலில் வைக்குமாறும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுமாறும் கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கௌரவ முதலமைச்சர் திரு . விக்கினேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்தமடல்.. -ர.பாலச்சந்திரன் (கட்டுரை)!!
Next post யாழ். நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!