பாகிஸ்தான் கடந்து வந்த பாதை
1947: பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது. முகமது அலி ஜின்னா முதல் கவர்னர் ஜெனரல் ஆனார்.
1958: அதிபர் இஸ்காந்தர் மிர்சா அரசியல் சாசனத்தை ரத்து செய்து ராணுவ சட்டம் பிறப்பித்தார். ஆனால் அவரை ராணுவ தளபதி முகமது அïப் கான், நாடு கடத்தினார்.
1965: காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுடன் 2-வது போர்.
1969: ராணுவ சட்டம் பிறப்பிப்பு. அïப் கான் ராஜினாமா. ராணுவ தளபதி ஆகா முகமது யாஹ்யா கான் அதிபர் ஆனார்.
1971: இந்தியாவுடன் 3-வது போரில் தோல்வி. வங்காளதேசம் பிறந்தது. யாஹ்யா கான் ராஜினாமா. ஜுல்பிகர் அலி பூட்டோ பாகிஸ்தான் அதிபர் ஆனார்.
1973: புதிய அரசியல் சாசனம் நடைமுறை. பூட்டோ பிரதமர் ஆனார்.
1977: ராணுவ தளபதி ஜியா உல்-ஹக் ராணுவ ஆட்சியை பிரகடனம் செய்தார்.
1978: ஜியா 6-வது அதிபர் ஆனார்.
1979: இஸ்லாமிய சட்டம் அறிமுகம். பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.
1985: பொதுத்தேர்தல்.
1988: பிரதமர் முகமது கான் ஜ×ன்ஜோவை அதிபர் ஜியா டிஸ்மிஸ் செய்து புது தேர்தலுக்கு உத்தரவு. ஜியா விமான விபத்தில் பலி. பெனாசிர் பூட்டோ முதல் பெண் பிரதமர் ஆனார்.
1990: தேர்தலில் நவாஸ் செரீப் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.
1993: ஊழல் புகாரில் நவாஸ் செரீப் அரசு டிஸ்மிஸ். தேர்தலில் பெனாசிர் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.
1996: ஊழல் புகாரில் பெனாசிர் அரசு டிஸ்மிஸ்.
1997: பொதுத் தேர்தல். செரீப் மீண்டும் பிரதமர் ஆனார்.
1999 மே: கார்கில் போர்.
1999 அக்டோபர்: முஷரப் ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீப் ஆட்சியை கவிழ்த்து, அதிபர் ஆனார்.
2000 டிசம்பர்: நவாஸ் செரீப், சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தல்
2001 ஜுன் 20 : முஷரப் தன்னை அதிபராகவும், ராணுவ தளபதியாகவும் அறிவித்தார்.
2002 ஏப்ரல்: முஷரப் மேலும் 5 ஆண்டுகளுக்கு அதிபராக தேர்வு.
2002 அக்டோபர்-நவம்பர்: முதல் பொதுத் தேர்தல். மிர் ஜபருல்லா ஜமாலி பிரதமர் ஆனார்.
2004 ஆகஸ்டு: சவுகத் அசிஸ் பிரதமர் ஆனார்.
2007 மார்ச்: தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை முஷரப் டிஸ்மிஸ் செய்தார்.
2007 ஜுலை: லால் மசூதியில் ராணுவம் புகுந்தது. தீவிரவாதிகளுடன் கடும் சண்டை. இப்திகார் பொதுமக்களின் எதிர்ப்பால் சவுத்ரி மீண்டும் தலைமை நீதிபதியாக நியமனம்.
2007 ஜுலை: அபுதாபியில் நவாஸ் செரீப்பும், பெனாசிர் பூட்டோவும் ரகசிய பேச்சுவார்த்தை.
2007 ஆகஸ்டு: நவாஸ் செரீப் நாடு திரும்ப சுப்ரீம் கோர்ட்டு அனுமதி.
2007 செப்டம்பர்: நாடு திரும்பிய நவாஸ் செரீப், மீண்டும் நாடு கடத்தல்.
2007 அக்டோபர்: முஷரப் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி. முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை.
பெனாசிர் நாடு திரும்பினார். வரவேற்பு ஊர்வலத்தில் மனித குண்டு தாக்குதல் -165 பேர் பலி. பெனாசிர் உயிர் தப்பினார்.
2007 நவம்பர் 3: அவசர நிலையை முஷரப் பிரகடனம் செய்தார்.
மொத்தத்தில் பாகிஸ்தானில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகவே இருந்து வருகிறது. அங்கு கடந்த 68 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் ராணுவ ஆட்சிதான் நடைபெற்று உள்ளது.