இரண்டு விபத்துக்களில் இரண்டு பேர் பலி!!

Read Time:1 Minute, 43 Second

1578690612-road-police2திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் 42 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

பொத்துவில் வீதியின் சிரிவல்லிபுரம் சந்திக்கு அருகில் மாடு ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு இடம்மாற்றியபின் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இதுதவிர நீர்கொழும்பு பிரதேசத்தில் பிடபத வீதியில் பமுனகமவில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற லொறி ஒன்று அந்த வழியாக சென்ற பெண்ணொருவர் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

55 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாஜுதீனுக்கு வதை செய்வதை காதலிக்கு தொலைபேசி மூலம் கேட்கச் செய்துள்ளனர்!!
Next post ரிஷாட் பதியூதீன் தேர்தல்கள் சட்டங்களை மீறுவதாக சிவசக்தி ஆனந்தன் முறைப்பாடு!!