விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் நிதி – மஹிந்தவுக்கு சம்பிக்க சவால்!!

Read Time:1 Minute, 42 Second

1608272547Untitled-1மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையில் 2006ம் ஆண்டு ராடா நிறுவனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 8000 இலட்சம் ரூபா பணம் கொடுத்ததாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பகிரங்க உரையாடல் மேற்கொள்ள வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்தமைக்கான அனைத்து தகவல்களும் வௌிவந்துள்ளதாகவும் விரைவில் இது குறித்து வழக்குத் தொடரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சம்பிக ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார்.

போலி நிறுவனங்கள் மூன்றை உள்ளடக்கிய ராடா நிறுவனத்தின் பிரதானிகளான டிரான் அலஸ் மற்றும் எமில் காந்தன் ஆகியோரை பயன்படுத்தி மேற்கொண்ட பரிவர்த்தனைகள் தற்போது வௌிவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் வௌிநாடுகளிலுள்ள தீவிரவாதிகளுடன் தென்னாபிரிக்கா ஊடாக மேற்கொண்ட பரிவர்த்தனைகளையும் எதிர்காலத்தில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம்!!!
Next post கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்ட பெருந்தொகை மருந்துகளுடன் ஒருவர் கைது!!