யார் இந்த கஜேந்திரகுமார்?.. மீண்டும் குடும்ப ஆட்சியா, தமிழர்களின் பிரதேசங்களில்? வாழையடி வாழை வம்ச பரம்பரை!! (கட்டுரை)!!
யார் இந்த கஜேந்திரகுமார்?.. மீண்டும் குடும்ப ஆட்சியா, தமிழர்களின் பிரதேசங்களில்? வாழையடி வாழை வம்ச பரம்பரை!! (கட்டுரை)
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியதும், புலம்பெயர் நாடுகளில் வாழும் சில தமிழர்கள், அறிக்கை அறிக்கையாக அள்ளிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். என்னமோ புது அதிசயம் நிகழ்ந்து விட்டதாக காற்றோடு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
யார் இந்த கஜேந்திரகுமார்???
ஏன் இவர் அரசியல் பேச வேண்டும்???
அதற்கான தேவை என்ன ???
போன்ற கேள்விகளை மேலோட்டமாக பார்க்கும்போது நியாயமான கேள்விகள் போல் தெரிகிறது. காலம் பதில் சொல்வதற்கு அவகாசம் போதாமல் உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் தேர்தல் முடிவடைந்து விடும்.
ஆகவே இந்த கஜேந்திர குமார் யார்? இவரால் தமிழ் மக்களுக்கு ஏதும் பலன் கிடைக்குமா என்பதை புரிநது கொள்வதற்கு உதவியாக இந்த கட்டுரையை எழுதுகிறேன். இவரின் வரலாற்றை ஆராய்வதற்காக சற்று பின்நோக்கிச் செல்வோம்….
மறைந்த மாமனிதர் ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் ஒரு திறமையான சட்டத்தரணி, மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற குற்றவியல் சட்டத்தரணி, இலங்கை, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் சென்று வெற்றிக்கனியை தட்டிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.ஜி.ஜி. பொன்னம்பலம் என்ற மனிதர் செய்த அரசியலால் தான் இன்று தமிழர்களின் தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவியுள்ளது.
1948 இல் வெள்ளையர்கள் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க முடிவு செய்த போது திரு பண்டாரநாயக்க அதை ஆதரித்தார், அதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பெரும் ஆதரவு வழங்கினர். தி.எஸ்.சேனநாயக்க அதை கடுமையாக எதிர்த்தார், உடனே தமிழர்களுக்கு தீர்வாக 50க்கு 50ம்பது கேட்டு கடுமையாக வாதாடினார் ஜி.ஜி. பொன்னம்பலம். அதற்கு பெரும்பான்மை இனமக்கள் சிங்களவர்கள் இருப்பதால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லையென்று நிராகரித்து விட்டனர். சிங்களவர்கள் 65 வீதம் இருப்பதால் 35 வீதம் கேட்டிருக்கலாம் ஆனால் நடந்தது வேறு.
திரு தி.எஸ் சேனநாயக்க எம்மோடு சேர்ந்து இயங்கினால் உங்களுக்கு கால் நடை, கைத்தொழில் அமைச்சு பதவி வழங்கலாம் என்றவுடன் ஜி.ஜி. பொன்னம்பலம் அதற்கு உடன்பட்டு நாங்கள் தமிழர்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ்வோம் என்று வெள்ளையர்களுக்கு உறுதி வழங்க அவர்களும் சரி என்று தமிழர்களின் தலை விதியை சாக்கடையில் போட்டு விட்டு சென்று விட்டனர்.
தன் அதிகாரத்தை பயன்படுத்தி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையும், மட்டக்களப்பில் காகிதம் தயாரிக்கும் கம்பனியையும் திறந்து வைத்துள்ளார். அன்று ஜி.ஜி யின் கதாபாத்திரத்தை தான் இன்று கருணா, பிள்ளையான் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4 வருடங்களின் பின் சிங்கள ஆட்சியாளரின் நரித் தந்திரத்தின் மூலம் ஜி.ஜி. பொன்னம்பலம் தூக்கி எறியப்பட்டார். சுமார் பத்து லட்சம் மலையக தமிழர்களின் குடியுரிமை பறிபோனதும் இவரால் தான். 1960இல் நடந்த தேர்தலில் படு தோல்வியை அடைந்தார். இவரின் பொறுப்பில்லாத, நடத்தையாலும், பதவி ஆசையாலும் இன்று தமிழர்கள் நடுத்தெருவில் அரசியல் அனாதைகளாக வாழ்கிறார்கள் என்பது தான் இயற்கையான உண்மை.
அடுத்தவர் திரு. “மாமனிதர்” குமார் பொன்னம்பலம் 1966இல் கூட்டணியில் இளைஞர் அணி தலைவராக இருந்து 1977இல் தலைவராகி வட்டுக்கோட்டை தொகுதியில் தேர்தலில் நிற்கும்படி சக நண்பர்கள் கேட்க, தான்தோன்றித்தனமாக தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தார். தன் பிடிவாத போக்கால் மக்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதித்தார். சரியான சாதி வெறி பிடித்தவர்கள், சக நண்பர்களை கீழ் சாதியின் பெயர் சொல்லி அழைப்பதும், அடுத்தவர்களை மதிக்கத் தெரியாத மாமனிதர், இந்து வெறியர், சுத்த அடிப்படைவாதி, பதவிப் பித்தர்.
அதன்பின் கனடாவில் வாழும் நக்கீரன் ஐயா, கனடாவுக்கு அழைத்து பேசியபின் புலிகளுடன் சேர்ந்து இயங்கினார். இவரின் மரணத்தின் பின் அதற்கு நன்றியாக அவரின் மகனான திரு. கஜேந்திரகுமாருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும்படி வாய்ப்பு கொடுத்ததால் தான் மக்களுக்கு அறிமுகமானார்.
அதுவரை வன்னியே தெரியாமல், லண்டனில் உல்லாச வாழ்க்கையில் மூழ்கி இருந்தவர். இன்று மதிப்புக்குரிய திரு.சம்பந்தன் ஐயாவை கண்டபடி விமர்சிப்பதும், பொய்யான தகவலை வழங்கி மக்களிடம் ஓட்டு பிச்சை கேட்டு வந்திருக்கும் இந்த சிங்கள அருவடியான இவரை மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
அதன் பின் தனக்கு உயர் பதவி கொடுக்க வேண்டும் என்று திரு.சம்பந்தரை கேட்க, அதற்கு அவர் உடன்படாததால் வெளியேறி சிங்கள இனவாதிகளிடமும், இந்திய உளவாளிகளிடமும் பெரும் பணம் பெற்று தலைகீழாக நடக்கும் கருத்தஆடு தான் இவர்.
இதற்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் சில தொழுநோய் பிடித்த நோயாளிகள் உடந்தையாகவும் உள்ளனர். சிங்கள அரசியல்வாதிகளிடம் இருந்து பெரும் பணம் பெற்று மலிவான அரசியல் நடத்திக் கொண்டும், மக்களுக்கு மலிவான சில பொருட்களையும் வழங்கி, மக்களை எமாற்றி வரும் அரசியல் சாத்தான். கடந்த வருடம் ஐநா மன்றத்தில் அமெரிக்கவால் கொண்டு வந்த தீர்மானத்தை சில புலம்பெயர் புண்ணியவான்களின் உதவியுடன் நடு வீதியில் தீ வைத்து கொளுத்தினார்.
சிங்களவன் செய்ய வேண்டியதை இவரே சிறப்பாக செய்து முடித்தார் தன் துரோகத்தை. ஐம்பத்திரெண்டு நாடுகளை சேர்ந்த வெள்ளை இனத்தவர்கள் பார்த்து சிரித்தார்கள், தமிழர்களின் ஒற்றுமையை.. இந்த மாதிரியான கேவலமான குணம் கொண்ட அயோக்கிய அரசியல்வாதியையா தெரிவு செய்ய போகிறீர்கள்??? என்பது அனேக புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதங்கமாகவுள்ளது. அதுவே உண்மையாகவும் உள்ளது.
அது மட்டுமல்ல திரு.சிறிதரன், சுமந்திரன் தலைமையில் ஆபிரிக்க நாடுளின் ஆதரவு வேண்டி ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். அங்கு அழைப்பில்லாமல் திடீரென வந்த கஜேந்திரகுமார் “இவர்களை நம்ப வேண்டமென்றும், தன்னை நம்பும்படி” கேட்க கூட்டம் இரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழர்களின் மானம் காட்டில் விட்ட முயல் கதையானது.
தமிழ் மக்களே நீங்கள் சிந்திய கண்ணீர், இழப்புகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் விடை கிடைக்கும் இந்த நேரத்தில், இப்படியான அயோக்கியர்களிடம் விழிப்பாகவும். துணிவாகவும் இருக்கவும். இல்லையேல் உங்கள் வாழ்வு மிகவும் துன்பமாக அமைய நீங்களே காரணமாக இருக்கக்கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
பொன்னம்பலம் குடும்பம் வட அரசியலின் புற்றுநோய். பொன்னம்பலம் வாரிசுகளுக்கு தொடர்ந்து அடிமைகளாக இருப்பதா? அல்லது சுயநலமற்ற, மக்கள் தொண்டு செய்யக்கூடிய அரசில்வாதிகளை இனம்கண்டு அவர்களை பாராளுமன்றம் அனுப்புவதா? என்பதை தீர்மானிக்க இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியிருக்கிறது.
யுத்தத்தின் பின் தொடர் சமூக சீரழிவுகளை சந்தித்து வரும் வட இலங்கைக்கு, இந்த தேர்தலின் பின்னாவது விமோட்சனம் கிடைக்குமா? அல்லது பகல் கனவாகி விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
–ஈழத்தில் இருந்து வெற்றிச்செல்வன்–
Average Rating