அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழுவினர் சாய்ந்தமருது பள்ளிவாசலுக்குள், மேற்கொண்ட அரசியல் சந்திப்பினால் பதற்றமான சூழ்நிலை..!!

Read Time:5 Minute, 33 Second

unnamed (66)அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான குழுவினர் – சாய்ந்தமருது பள்ளிவாசலுக்குள், நிருவாகத்தினரின் உத்தரவினையும் மீறி நுழைந்து, அரசியல் சந்திப்பொன்றினை நடத்த முயற்சித்தமையினால், அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டது.

இதேவேளை, பள்ளிவாசலுக்குள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்திய, சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவரை, அமைச்சர் றிசாத் குழுவினர் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு இன்று சனிக்கிழமை நண்பகலளவில், அமைச்சர் றிசாத் பதியுத்தீனும், அவரின் குழுவினரும் வந்துள்ளனர். இந்தக் குழுவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், அ.இ.ம.காங்கிரஸ் வேட்பாளர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோரும் இருந்துள்ளனர். சாய்ந்தமருது பள்ளிவாசலில் அரசியல் சந்திப்பொன்றை நடத்துவதற்காகவே, இவர்கள் அங்கு வந்தனர்.

இந்த நிலையில், சாய்ந்தமருது பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபாவும் அங்கிருந்தார். அவர், அமைச்சர் றிசாத் குழுவினரிடம், பள்ளிவாசலில் அரசியல் சார்பான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டாமென, தேர்தல்கள் திணைக்களம் தம்மை அறிவுறுத்தியுள்ளதாகவும், அதனால், பள்ளிவாசலினுள் குறித்த சந்திப்பினை நடத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

உண்மையில், இன்று சனிக்கிழமை சுமார் 10.30 மணியளவில், தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து சாய்ந்தமருது பள்ளிவாசலுக்கு ஃபக்ஸ் மூலம் கடிதமொன்று அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில், மத ஸ்தலங்களில், அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டாமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.

இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், பள்ளிவாசலில் அரசியல் சந்திப்புக்கள் எவற்றினையும் நடத்த வேண்டாமென, அமைச்சர் றிசாத் குழுவினரிடம் – பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா கோரிக்கை விடுத்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் றிசாத் குழுவினர், பள்ளிவாசல் தலைவரை அச்சுறுத்தும் வகையில், மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியதாகத் தெரியவருகிறது. மேலும், பள்ளிவாசல் நிருவாகத்தினரின் உத்தரவினையும் மதிக்காமல், சண்டித்தனமான முறையில், குறித்த அரசியல் சந்திப்பினை – பள்ளிவாசலில் நடத்தியதாகவும் அறிய முடிகிறது. இதனால், அங்கு பதற்றமானதொரு சூழ்நிலை ஏற்பட்டது.

இவ்விடயம் தொடர்பில், சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்த விடயங்கள் பற்றி விசாரித்தோம்.

மிகவும் மனம் நொந்த நிலையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் ஹனீபா பேசினார். தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்துக்கிணங்க, பள்ளிவாசலினுள் யாரும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட இடமளிப்பதில்லை என்கிற முடிவினை தாம் எடுத்திருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே, அமைச்சர் றிசாத் குழுவினரிடம், பள்ளிவாசலில் சந்திப்புகளை நடத்த வேண்டாம் எனக் கூறியதாகவும் – நம்மிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் றிசாத்தின் குழுவிலிருந்த சிலர் – தன்னை மிக மோசமான வார்த்தைகளால் ஏசியதாகவும், தனது கோரிக்கையினை மதிக்காமல், அவர்கள் பள்ளிவாசலில் சந்திப்பினை நடத்தி விட்டுச் சென்றதாகவும் – சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் ஹனீபா மேலும் விபரித்தார்.

இதேவேளை, அமைச்சர் றிசாத் குழுவினர் தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக, சாய்ந்தமருது பள்ளிவாசலை – இவ்வாறு அடாத்தாகப் பயன்படுத்தியமை தொடர்பிலும், சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவரை – அமைச்சர் றிசாத் குழுவினர் மோசமான வார்த்தைகளால் ஏசியமை தொடர்பிலும், அப்பிரதேச மக்கள் தமது கடுமையானஅதிருப்திகளைத் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தலுக்காக ஆளுக்கு இரண்டரை மில். ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.!!
Next post யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் UNHCR நிறுவனத்தினால் அவசர பொதிகள் கையளிப்பு!!