ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் – பொலிஸார் துப்பாக்சூடு!!

Read Time:1 Minute, 42 Second

1582501439Securityகொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்களுக்கும், மேல்மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பைரூஸ் ஹாஜியாரின் ஆதரவாளர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் முஜீபுர்ரஹ்மானின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டதாக மேல்மாகான சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார் தெரிவித்தார்.

புதுக்கடைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் காரியாலயத்திற்கு வருகைதந்த முஜீபுர்ரஹ்மானின் ஆதரவாளர்கள் தனது வாகனம் மற்றும் தேர்தல் காரியாலயம் மீதும் தாக்குதல் மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சம்பவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக மேல்மாகான சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியார் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தலை முன்னிட்டு அமமெரிக்கா பயண எச்சரிக்கை!!
Next post நீங்கள் நினைப்பது சரியா? தவறா? முழுமையாக பாருங்கள்…!!!