முத்தத்திற்கு வித்யா பாலன் ரெடி
எனது படங்களில் எனக்கு கண்டிப்பாக முத்தக் காட்சி இடம் பெற வேண்டும் என்று வலிய வந்து கேட்கிறாராம் வித்யா பாலன். பாலிவுட்டில் பரவசத்தை ஏற்படுத்தி வருபவர் வித்யா பாலன். இவரை தமிழுக்குக் கொண்டு வர கமல் உள்பட பலரும் முயன்றும் இதுவரை முடியவில்லை. மணிரத்னம் மட்டுமே இதில் வெல்ல முடிந்தது. அதுவும் கூட இந்தியில்தான். ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சன் ஜோடியாக நடித்த மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் மாதவனுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் வித்யா பாலன். படத்தில், மாதவனுக்கு மூச்சு திணற திணற பெவிகுயிக் விளம்பரம் போல நச்சென்று முத்தம் கொடுத்து அசத்தியிருந்தார். இந்த முத்தக்காட்சியை பார்த்து அபிஷேக் பச்சனே அசந்து விட்டாராம். அந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது வித்யாவையே பார்த்துக் கொண்டிருந்தாராம். ஆனால் அருகில் ஐஸ் இருந்ததால் ரொம்ப உணர்ச்சிவசப்படாமல் பார்த்துக் கொண்டாராம். வித்யாபாலன், தற்போது அதிரடியாக புதியதொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு யார் வாய்ப்பு தருவதாக இருந்தாலும் கண்டிப்பாக முத்தக்காட்சி ஒன்றை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாராம்.
டூயட், கிளாமர் காட்சிகளில் மட்டுமில்லாமல் சோக காட்சிகளிலும் கண்டிப்பாக முத்தக் காட்சியை வைக்க வேண்டும் என்று படு தில்லாக கூறியுள்ளார்.
எந்த நடிகையாவது முத்தக்காட்சியில் நடிக்க சங்கோஜப்பட்டால் உடனே என்னை தேடி வாருங்கள். அந்த நடிகைக்கு பதில் முத்தக் காட்சிக்காக டூப் போடக் கூட நான் ரெடி என்று தடாலடியாக அறிவித்துள்ளார் வித்யா.
அடடா, முத்தத்திற்கு டூப் போட முன்வந்த ஒரே நடிகை இவர்தான் என்று பாலிவுட்காரர்கள் புல்லரித்துப் போயுள்ளனர்.
குத்தாட்டம் போல முத்தாட்டம் என்ற புதிய டிரெண்டுக்கு அடிகோலுகிறார் வித்யா என்று பேச்சு கிளம்பியுள்ளது.
இதுக்குத்தான் கமல் கடுமையாக முயன்றாரோ?!?
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...