தேர்தல் சட்டங்களை மீறிய 454 பேர் கைது!!

Read Time:1 Minute, 48 Second

743270663police-logo2தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட 153 சுற்றிவளைப்புக்களில் சந்தேகத்தின் பேரில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பொலிஸ் தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற 192 முறைப்பாடுகள் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 969 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தின் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு தெரிவிக்கின்றது.

தேர்தல்கள் திணைக்களத்திற்கு பதிவாகியுள்ள அதிகளவான முறைப்பாடுகள், சட்டங்களை மீறி போஸ்டர்கள், கட்அவுட்கள் மற்றும் பதாதைகளை ஒட்டுதல் சம்பந்தமாக என்பதுடன் அவை தொடர்பில் 216 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதுதவிர தேர்தல் வன்முறை சம்பவங்கள் சம்பந்தமாக 18 முறைப்பாடுகள் மட்டுமே தேர்தல்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யார் ஆண்டாலும் எமக்கான உரிமையைத் தரவேண்டும்!!!
Next post தேர்தல் பணிகளுக்கு நடுவில்….!!