யார் ஆண்டாலும் எமக்கான உரிமையைத் தரவேண்டும்!!!

Read Time:2 Minute, 9 Second

1395911873Untitled-1இந்த நாட்டை யார் ஆண்டாலும் இந்த மண்ணிலே எங்களுக்கான உரிமையை, எங்களுக்கான இயல்பு வாழ்க்கையை, எங்கள் நிலங்களை விடுவித்து எவருடைய நெருக்குதலுமின்றி தங்களைத் தாங்களே ஆள்கின்ற உரிமையை சிங்களக் கட்சிகள் எப்போது தருவதற்கு தயாராக இருக்கின்றனவோ அப்போதுதான் இந்த நாட்டில் இயல்வு வாழ்க்கை ஏற்படும் எனத் தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் சிவஞானம் சிறிதரன்.

யாழ்ப்பாணம் – வரணிப் பிரதேசத்தில் நேற்றிரவு (புதன்கிழமை) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ராஜபக்ஷ, மைத்திரிபால, ரணில் விக்கிரமசிங்க, யார் ஆண்டாலும் இந்த மண்ணிலே எங்களுக்கான உரிமையைத் தரவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் எங்களுக்கே உரித்தான இறைமையின் அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் நாங்கள் அந்த இறைமையோடு வாழ்ந்த இனம். ஆனால் பின்னாளில் காலணித்துவம் செய்த பிரித்தானியர் உட்பட வெளிநாட்டவர்களால் எங்களுடைய நிலங்களை நிர்வாக இலகுபடுத்தலுக்கான சிங்களத்தோடு இணைத்துக் கொண்டார்கள்.

சிங்களத்தோடு இணைத்துக்கொள்ளப்பட்டதால் சிங்களவர்கள் நினைக்கிறார்கள், நாங்கள் தங்களுடைய தேசத்தை பிடித்து விட்டோமென்று எனவும் இங்கு சிறிதரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை !!
Next post தேர்தல் சட்டங்களை மீறிய 454 பேர் கைது!!