முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் நகரசபைத் தலைவரும் கைது!!

Read Time:2 Minute, 1 Second

819043798Arrestகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்து, கடமைகளை சரிவர நிறைவேற்றுவதற்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடொன்றிற்கு அமைய அப்பிரதேசத்திற்கு உதவி தேர்தல்கள் ஆணையாளர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கலந்தர் லெப்பே முஹம்மத் பரீத் மற்றும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவர் ஷாஹுல் ஹமீத் முஹம்மத் அஸ்பர் ஆகியோர் உதவி தேர்தல்கள் ஆணையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததாக பொலிஸில் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.

இதன்படி சந்தேக நபர்கள் இருவரும் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மத்திய வங்கி பிணைமுறி விசாரணைக்காக மீண்டும் பாராளுமன்ற தெரிவுக்குழு!!
Next post கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை !!