புளொட் தலைவர் சித்தார்த்தன் புலிகளால் இலக்கு!; புளொட் இராணுவப் பிரிவினரால் தாக்குதல் முறியடிப்பு!!

Read Time:10 Minute, 28 Second

plotesithartan.jpgபிரபாகரனின் குணங்குறிகளுக்கு எதிர்மறையாக திரு.சித்தார்த்தன் அவர்கள் தனது தோழர்களுடன் மிகவும் அன்பாகவும் பணிவாகும் பழகும் இயற்குணம் படைத்தவர். கழக உறுப்பினர்களின் துன்ப துயரங்களில் உரிமையுடன் பங்கு கொள்ளும் இவர் தன் தோழர்களின் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினரை கௌரமாக நடத்துவதிலும் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதிலும் ஆத்ம திருப்தியடைவார். இதன் பொருட்டு இறந்த தோழர்களின் வீடுகளுக்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறவேனும் திரு.சித்தார்த்தன் அவர்கள் அங்கு வருவார் என்பதை நன்குணர்ந்த புலிகள் வழியில் கிளைமோர் குண்டுகளை பொருத்தி காத்திருந்தனர். ஆனால் தலைவர் புறப்பட முன்பு செயலில் இறங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இராணுவப் பிரிவினர் அவர் பயணம் செய்யவிருக்கும் பாதையில் இருக்கக் கூடிய கலகக்காரர்களை முறிடிக்கும் அல்லது விரட்டியடிக்கும் (route clearing) செயலில் இறங்கினர்.

plotesithartan.jpgபுளொட் தலைவர் சித்தார்த்தன் புலிகளால் இலக்கு, புளொட் இராணுவப் பிரிவினரால் தாக்குதல் முறியடிப்பு!!
கடந்த 31.10.2007ம் திகதி புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் எம்மக்களின் விடிவிற்காய் விடுதலைப் போராட்ட ஆரம்பகால முதல் (ஆயிரத்துதொளாயிரத்து எண்பதுகளிலிருந்து) தம் முழு வாழ் நாட்களையும் அர்ப்பணித்து செயற்பட்டு வந்த புளொட்டியக்க உறுப்பினர்களான செல்வராசா மற்றும் தேவராசா ஆகியோர் தம் இன்னுயிர்களை துறந்துள்ளனர். கால் நூற்றாண்டுகளாக தம்மின மக்களின் துயர்துடைக்க அயராது உழைத்த அந்த வீரமறவர்கள் பாசிச புலிகளின் ஏக பிரதிநிதித்துவ மோகத்தின் தூண்டுதலால் தமது விடுதலை வேள்வியில் இருந்து தங்களை நிரந்தரமாக விலத்திச் சென்றுள்ளனர். இப்புனித மறவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் தங்களை இணைத்து எம் மக்களின் விடுதலைக்காய் ஆற்றிய அந்த அர்ப்பணிப்புடன் கூடிய அரும்பெரும் தியாகங்களுக்கு நன்றி செலுத்துமுகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரும் எம் தேசத்து மக்களும் சிரம் தாழ்த்தி நிற்கின்றனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது பதவி மோகத்திற்காக எம் இளம் சமூகத்தை மனித வெடிகுண்டுகளாக்கி முழு தமிழ் சமூகத்தையும் சுடுகாடு நோக்கி நகர்த்தி கொண்டு எம்மக்களையும் போராளிகளையும் எதிரிகளாக கருதி மக்கள் முன்தோன்றாமல் பங்கரில் ஓழிந்திருக்கும் இத்தருணத்தில் எம்மக்களின் விடுதலையில் தீராத மோகம் கொண்டு செயற்பட்ட எம் வீரமறவர்களின் சேவைக்கு செலுத்தும் பெரும் பிரதியுபகாரமாக அவர்களின் இறுதிப் பயணத்தில் கலந்து கொள்ளும் நோக்குடன் ஓர் தலைமைக்கு தகுந்த பண்புகளுடன் எவ்வித ஆரவாரங்களும் இன்றி புளொட் இயக்க தலைவர் திரு.சித்தார்த்தன் அவர்கள் வவுனியா சென்றிருந்தார்.

முழுவவுனியா நகரமும் சோகமயமாக காணப்பட்டது. மக்கள் வெள்ளம் வீரமறவர்களின் தியாகத்தை முழுமனதுடன் ஏற்று தமது இறுதியஞ்சலியை செலுத்திக் கொண்டிருந்தனர். இத்தருணத்தில் அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வரும் தலைவர் சித்தார்த்தன் அவர்களை தாக்க புலித்தலைமை உத்தரவிட்டிருந்தது. புலிகளின் வங்குரோத்து அரசியலையும் அவர்களின் கோழைத்தனமான தாக்குதல்களையும் நன்கு இனம்கண்டு வரும் மக்களின் பார்வை தலைவர் திரு.சித்தார்தன் அவர்களின் பாதுகாப்பு நோக்கி திரும்பியது.

தலைவர் அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் தருணத்தில் புலிகள் தாக்க திட்டமிட்டிருக்கும் செய்தி மக்களிடம் இருந்து வவுனியா தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கிளையை சென்றடைந்தது. நிலைமையை விளங்கிக் கொண்ட கழக உறுப்பினர்கள் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலில் இருநது பொதுமக்களை காப்பாற்றும் நோக்குடன் திட்டமிடப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வுகளில் உடனடி மாற்றங்கைளை கொண்டு வந்து வீர மறவர்களின் உடல்கள் தாங்கிய பேழைகள் வவுனியா தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கிளைக்கு எடுத்து வந்து அங்கு அஞ்சலிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். அங்கு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் உடல்களுக்கு மலர் மாலையணிவித்து தனது இறுதி மரியாதையை செலுத்தியிருந்தார்.

பிரபாகரனின் குணங்குறிகளுக்கு எதிர்மறையாக திரு.சித்தார்த்தன் அவர்கள் தனது தோழர்களுடன் மிகவும் அன்பாகவும் பணிவாகும் பழகும் இயற்குணம் படைத்தவர். கழக உறுப்பினர்களின் துன்ப துயரங்களில் உரிமையுடன் பங்கு கொள்ளும் இவர் தன் தோழர்களின் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினரை கௌரவமாக நடத்துவதிலும் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதிலும் ஆத்ம திருப்தியடைவார். இதன் பொருட்டு இறந்த தோழர்களின் வீடுகளுக்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறவேனும் திரு.சித்தார்த்தன் அவர்கள் அங்கு வருவார் என்பதை நன்குணர்ந்த புலிகள் வழியில் கிளைமோர் குண்டுகளை பொருத்தி காத்திருந்தனர்.

ஆனால் தலைவர் புறப்படுமுன்பு செயலில் இறங்கிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இராணுவப் பிரிவினர் அவர் பயணம் செய்யவிருக்கும் பாதையில் இருக்கக் கூடிய கலகக்காரர்களை முறிடிக்கும் அல்லது விரட்டியடிக்கும் (route clearing) செயலில் இறங்கினர்.

வீதியின் இருமருங்காலும் நடவடிக்கையில் இறங்கிய புளொட் இராணுவப்பிரிவினர் மருதங்குளம் கல்லுமலையடியை அடைந்த போது அங்கு மிகவும் சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டொன்று பொருத்தப்பட்டிருந்ததை கண்டு கொண்டதோடு அப்பிரதேசத்தில் மூவர் இராணுவச் சீருடையில் பதுங்கியிருப்பதையும் அவதானித்ததுடன் அவர்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்களை நெருங்கிய போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சீருடையணிந்தோர் கிளைமோர் குண்டையும் வெடிக்க வைத்து புறமுதுகு காட்டி ஓடித்தப்பி விட்டனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் அதிகார வெறி காவு கொண்ட தமிழ்த் தலைவர்கள், போராளிகள், கல்விமான்கள், பொதுமக்கள் வரிசையில் இடம்பிடிக்கவிருந்த தலைவர் சித்தார்த்தன் அவர்களின் உயிர் அவரது இராணுவப்பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளது. இன்று தமிழ் தேசம் எதிர் நோக்கி நிற்கும் அவலங்கள் அனைத்துக்கும் பிரபாகரனின் அதிகார வெறியே காரணம் என்பதை எம்மக்களில் பலர் உணர்ந்தும் உணராதவர்களாக பாசாங்கு புரிவதன் விளைவே இன்றும் சகோதரப்படுகொலைகள் நீடித்து செல்வதற்கு காரணமாக அமைகின்றது.

ஓரு மனிதன் தான் சார்ந்த சமூக விடுதலைக்காக போராட உரிமையுடையவன். அவ்வுரிமையை மறுப்பதற்கோ அன்றி வரையறைகள் விதிப்பதற்கோ எந்த ஒரு தனிமனிதனுக்கோ அன்றி அமைப்புக்கோ அதிகாரம் கிடையாது. அவ்வகையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடப் புறப்பட்ட போராட்ட வீரர்களின் தியாகங்களை புலிகள் தமது ஏக பிரதிநிதித்துவ மோகத்தின் நிமித்தம் மழுங்கடித்து வருவதுடன் அவற்றை பூண்டோடு அழிக்க கங்கணம் கட்டி நிற்கின்றனர். ஆனால் புலிகளின் வன்முறைகள் முடிவுக்கு வருவதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் மக்கள் புலிகளின் வன்முறைகளுக்கு துணைபோகாமல் அவற்றை எதிர்த்து போராட முன்வர வேண்டும். –அதிரடியின் ஆசிரியர் குழுவில் ஒருவரான திரு.பீமன் 03.11.07
Thanks… www.athirady.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மனைவிக்கு விமானத்தைப் பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி
Next post மரண ருசியை பெனாசிர் விரைவில் உணர்வார் : தாலிபான்