அமெரிக்காவில் இறந்தபின்னும் மகள்களைப் பாடாய்படுத்தும் தந்தை!!

Read Time:2 Minute, 14 Second

b3f363b3-dc03-479e-968f-c8626060b3e7_S_secvpfஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 37 மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 77-வது வயதில் மரணமடைந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது குடும்பச் சொத்தான 20 மில்லியன் டாலரை பங்கிட்டுக்கொள்ள விரும்பிய அந்த சகோதரிகளுக்கு அவர்களது தந்தை எழுதி வைத்திருந்த உயிலில் அதிர்ச்சி காத்திருந்தது.

விக்டோரியா லபோஸ்(17) மற்றும் மர்லினா லபோஸ்(21) என்ற அந்தப் பெண்கள், திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்ற பின் அல்லது அவர்களது தாயாரை நன்கு கவனித்துக் கொண்டால் மட்டுமே சொத்துக்களை அனுபவிக்க முடியும் என்று அவர்களின் தந்தை அவரது இறப்பிற்கு ஒன்பது மாதங்கள் முன்பு உயில் எழுதி வைத்துள்ளார்.

இன்னொரு விதத்தில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் பட்டம் பெற்றால், ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்களைப் பெறலாம் என குறிப்பிட்டுள்ளார். கிடைக்கும் பணத்தை வைத்து என்ன செய்ய விரும்புகிறார்கள் என நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதித் தர வேண்டும் எனவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சகோதரிகள் பாரம்பரிய சொத்தை அனுபவிக்கவிடாமல் பாடுபடுத்தும் விதமாக இத்தனை விதிகளை விதித்த தந்தையின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இறப்பிற்கு பின்பும் ‘தங்களது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்’ என தீர்மானித்த தந்தையின் உயிலுக்கு எதிராக, இந்த விவகாரத்தை கோர்ட்டுக்கு எடுத்து சென்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறை பிடிக்கப்பட்ட கிராம மக்களிடமே சிக்கிக் கொண்ட பாகிஸ்தான் தீவிரவாதி: பரபரப்பு தகவல்!!
Next post ஷில்லாங்கில் விசாரணைக் கைதி தூக்கு போட்டு தற்கொலை!!