மஹிந்தவுக்கு சேறுபூசும் வகையில் கையேடு – அச்சகம் சுற்றிவளைப்பு!!

Read Time:1 Minute, 50 Second

2121223548Untitled-1முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கையேடுகளை அச்சிட்ட அச்சகம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவ – திவுலபிடி வீதியில் அமைந்துள்ள இந்த அச்சகத்திற்கு, ஆர்.எம்.ஆர் அச்சகத்திலிருந்தே இவற்றை அச்சிடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக, அச்சகர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி கடவன வீதி – பெபிலியான பகுதியிலுள்ள ஆர்.எம்.ஆர் எனும் அச்சகம் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த அச்சு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

எம்.விக்ரமரத்ன என்பவரே இதனை அச்சிட செய்துள்ளதாகவும் அவரது முகவரி இலக்கம் 400, புறக்கோட்டை வீதி – கோட்டை என தெரியவந்துள்ளதாகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அங்கு வசிப்பவர்கள் யார் என உலகுக்கே தெரியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தேர்தல் தோல்வி அச்சத்தின் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு நாட்டை மீட்ட தலைவருக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதி சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் கொள்ளை – நால்வர் கைது!!
Next post பயணப் பையில் யுவதியின் சடலம் – ஒருவர் கைது!!