குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்கள் மீதான தடை நீக்கம்!!

Read Time:2 Minute, 13 Second

c2301665-81ec-4ca6-9f34-c1971d97dc03_S_secvpf857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டதை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி
குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்களுக்கு தடை நீக்கப்படுகிறது.

ஆபாச இணையதளங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கொடுத்துள்ள ஆபாச இணையதளங்கள் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டனர்.அதை ஏற்று, 857 இணையதளங்களை முடக்குமாறு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, அவை முடக்கப்பட்டன.

ஆனால், இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

857 இணையதளங்களை முடக்கிய மத்திய அரசின் உத்தரவு குறித்து இந்த கூட்டத்தில் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அத்துடன், ஆபாசமற்ற இணையதளங்கள் மற்றும் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்காத இணையதளங்கள் மீதான தடையை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அத்தகைய இணையதளங்களை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு இணையதள சேவை நிறுவனங்களை உடனடியாக கேட்டுக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மற்ற இணையதளங்கள் மீதான தடை உத்தரவு குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அகதிகள் மீதான சித்திரவதைக்கு அவுஸ்திரேலியா உதவி!!
Next post ஒடிசாவில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த கொடூர மந்திரவாதிக்கு மரண தண்டனை!!