நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!

Read Time:2 Minute, 3 Second

13282760301நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள கஞ்சம நாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது மதிக்க தக்க சிறுமி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார்

நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பெற்றோர் ஒரு அறையிலும், அந்த சிறுமி மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்களது வீடு கூரையால் வேயப்பட்ட வீடாகும்.

மாணவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் குமார்(வயது 30) என்பவர் மாணவியின் வீட்டுக்குள் சத்தம் இல்லாமல் நைசாக நுழைந்தார்.

மாணவி படுத்திருந்த அறைக்குள் புகுந்த வாலிபர் குமார், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது மாணவி திடுக்கிட்டு எழுந்தார். வாலிபர் குமாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவர் அலறி அடித்துக் கொண்டு உடனே தனது தாயிடம் நடந்த இச்சம்பவம் குறித்து கூறினார்.

அப்போது வாலிபர் குமார் வீட்டிலிருந்து தலைதெறிக்க வெளியே தப்பி ஓடினார்.

இது பற்றி பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லலிதா வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சியில் தங்கியிருந்து தொடர் கைவரிசை: சென்னை வாலிபர்கள் கைது!!
Next post சசிபெருமாள் மரணத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் மேலும் 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்!!