யாழில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம்!!

Read Time:2 Minute, 18 Second

unnamed (48)யாழ்.குருநகர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்துமாறு, யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

சடலத்தை இன்று காலை சட்டவைத்திய அதிகாரியுடன் சென்று பார்வையிட்ட நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்ததோடு, உயிரிழந்தவரின் மனைவியிடம் வாக்குமூலமும் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, நீதவானின் உத்தரவிற்கமைய சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

யாழ்.குருநகர் பகுதியில் அமைந்துள்ள சனசமூக நிலைய கட்டிடத்தில் இருந்து குறித்த சடலம், இன்று காலை கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.சனசமூக நிலையத்தில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

யாழ்.குருநகர் பகுதியில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தில், ஆணொருவரின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அந்தோனிப்பிள்ளை கமல் (வயது – 35) என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் நேற்று இரவு அங்கு நடைபெற்ற இசைநிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பாத நிலையில், இன்று அதிகாலை அயலவர்களால் இனங்காணப்பட்டுள்ளார்.

எனினும் மரணம் குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம், சட்டவைத்திய அதிகாரி மற்றும் நீதவான் விசாரணையை அடுத்து யாழ் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் பல்கலை விடுதியில் சிங்கள முஸ்லீம் மாணவர் வெளியேற்றம் இதற்கு யார் காரணம்?
Next post ஒற்றையாட்சிக்குள் நியாயமான அதியுச்ச அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது-புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்!!