சந்திரிக்கா எப்போதும் நல்லவர்களுடனேயே இருப்பவர்!!

Read Time:1 Minute, 42 Second

17277474121முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாட்டை மேலும் சரியான வழியில் இட்டுச் செல்ல, நல்லாட்சி குழுவினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட தேர்தல் செற்பாட்டு அலுவலகத்திற்கு சந்திரிக்கா விஜயம் செய்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போது தேர்தல் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்களுக்கு இடையில் நடைபெறுகின்றது. அதாவது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு இடையில் தேர்தல் இடம்பெறுகின்றது.

விஷேடமாக சந்திரிக்கா அம்மையார் எப்போதும் நல்லவர்களுடனேயே இருப்பவர். வேறு விதத்தில் கூறுவதாயின் அவர் எப்போதும் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்திருப்பவர்.

இன்று நல்லாட்சி அரசாங்கம் இருப்பது அவரது தலைமையில், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதில் முதன்மையாக செயற்பட்டவர் அவரே.

இன்றுவரை நாட்டை சரியான வழியில் இட்டுச் செல்ல நல்லாட்சி அரசாங்கத்துடன் அவர் உள்ளார். அவரது ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு உண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாளை தபால் மூல வாக்களிப்பு!!
Next post இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நாணயத்தாள்களை கடத்தும் அறுவர் கைது!!