திருமணமாகாத இளைஞர்கள் எண்ணிக்கை ஈராக்கில் அதிகரிப்பு

Read Time:1 Minute, 18 Second

animan-flower.gifஈராக் நாட்டில் திருமணம் செய்து கொள்ளாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஈராக் இளைஞர்களின் திருமண கனவு கானல் நீராகி வருகிறது. பொருளாதார நிலை திருமணம் செய்யமுடியாத அவலத்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. ஈராக்கில் விலைவாசி கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. வாழ்வதற்கு போதுமான சம்பளம் கிடைப்பதில்லை. இதனால் இளைஞர்கள் திருமணம் செய்ய பயப்படுகின்றனர். திருமணத்திற்காக 30 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. திருமணச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்க வேண்டும். திருமண பொருட்கள் மற்றும் விருந்து செலவு, பெண்ணிற்கு விலைமதிப்புள்ள புடவை, நகைகளையும் மாப்பிள்ளை வீட்டாரே வாங்க வேண்டும். இதனால் இங்குள்ள இளைஞர்களில் பெரும்பாலானோர் திருமணம் செய்யப்பயப்படுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒழிவார்களா பெருந்தீனி ஆசாமிகள்? -புதிய முறையில் ஒரு பூஜை
Next post தென்னை மரத்தில் அபாரமாக ஏறி அசத்தும் கேரள சிறுமி