லொரி விபத்தால் ரயில் சேவை பாதிப்பு – 20 பேர் காயம்!!

Read Time:1 Minute, 43 Second

8025791741கம்பளை மற்றும் கேலிஓயவுக்கு இடையிலான பகுதியில் வீதியை விட்டு விலகிய லொரி ஒன்று ரயில் பாதையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 10.00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் லொரியில் சென்ற 20 பேர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆபத்தான நிலையில் இருந்த சிறு குழந்தையொன்று உள்ளிட்ட இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாத்திரை ஒன்றின் நிமித்தம் சென்ற குழுவினரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதோடு சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே இதற்குக் காரணம் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த விபத்தினால் மலையகப் பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதமரைப் பாதுகாக்க வாழ்வையே தியாகம் செய்யத் தயார் – சஜித்!!
Next post சட்டவிரோத பிரச்சாரம் – இரு வேட்பாளர்கள் கைது!!