ஆலங்குளம் அருகே மாணவருடன் ஓட்டம் பிடித்த பேராசிரியை எங்கே?: போலீசார் தேடுதல் வேட்டை!!

Read Time:2 Minute, 46 Second

f6cab05c-0e15-45c9-9c51-649924931f69_S_secvpfநெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 19). இவர் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சுந்தர்ராஜ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சுந்தர்ராஜூவின் பெற்றோர் கடையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் சுந்தர்ராஜ், அதே கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த ஆலங்குளம் அருகே வடக்கு பூலாங்குளத்தை சேர்ந்த மரியபுஷ்பம்(23) என்பவருடன் ஓட்டம் பிடித்திருப்பது தெரியவந்தது.

சுந்தர்ராஜூவுக்கு மரியபுஷ்பம் பாடம் எடுத்து வந்துள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. மாணவன் என்றும் பாராமல் மரியபுஷ்பம், சுந்தர்ராஜூவுடன் பழகி வந்துள்ளார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்துள்ளனர். செல்போனிலும் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்தனர்.

இதனிடையே இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வரவே, இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்கள் என்று எண்ணிய இருவரும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.

மரியபுஷ்பம் மாயமானது தொடர்பாக அவரது தந்தை ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் எங்கு சென்றுள்ளார்கள் என்று தெரியவில்லை. வெளியூர்களில் உள்ள உறவினர்கள் யாராவது வீட்டிற்கு சென்றுள்ளனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து மதுரை, திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று போலீசார் தேட முடிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொத்து பிரச்சினையில் மகனுக்கு எதிரான வழக்கு: சாட்சியளிக்க கூண்டில் ஏறிய தாய் மயங்கி விழுந்து இறந்தார்!!
Next post பிரதமரைப் பாதுகாக்க வாழ்வையே தியாகம் செய்யத் தயார் – சஜித்!!